ஸ்பெயினில் இளம்பெண் ஒருவருக்குத் தனது உயிரை மாய்த்துக்கொள்ள (கருணைக்கொலை) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நோலியா காஸ்டிலோ ராமோஸ் எனும் 25 வயதுடைய பெண் ஒருவருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக இந்த அனுமதியை வழங்கியுள்ளன.

பாலியல் வன்கொடுமை

கடந்த 2022 இல் நிகழ்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகிய குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்துள்ளார்.

இருப்பினும் அவர் உயிர் பிழைத்த நிலையில் அவரது இடுப்புக்குக் கீழ்ப்பகுதி முழுமையாகச் செயலிழந்துள்ளது.

இந்தநிலையில் நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன் எனவும் எனது ஆறாத துயரத்தை நிறுத்த விரும்புகிறேன் எனவும் கோரி அவர் கருணைக்கொலைக்கு அனுமதி கோரியுள்ளார்.

கருணைக்கொலை

இருப்பினும் அவரது தந்தை கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவுடன் இதற்கு எதிராகப் போராடி வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்...! கருணைக்கொலைக்கு நீதிமன்றம் அனுமதி | Noelia Castillo Euthanasia Spain Legal Battle 2026

தனது மகளுக்குச் சரியான முடிவெடுக்கும் திறன் இல்லை என்றும் உயிரைப் பாதுகாப்பதே அரசின் கடமை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

இவ்வாறு 18 மாதங்களாகப் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் முகங்கொடுத்து வந்த நிலையிலேயே நீதிமன்றம் குறித்த பெண்ணிற்குக் கருணைக்கொலையை நிறைவேற்ற இணங்கித் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments