அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இது “அரசர்கள் வேண்டாம்” பேரணிகளின் மூன்றாவது கட்டமாகும்.

போராட்டக்காரர்கள், ஈரான் மீதான போர், குடியேற்ற கொள்கைகள் மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடுவதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பிற்கு எதிராக கிளம்பிய போராட்டம்

இதன்படி, நியூயோர்க், வாஷிங்டன் டி.சி., லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டதுடன் கூட்டமாக தெருக்களில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், போராட்டக்காரர்கள் ட்ரம்ப் மற்றும் பிற அதிகாரிகளின் உருவ பொம்மைகள் மற்றும் பதாகைகளை எடுத்துச் சென்றனர் மற்றும் அவர்களை பதவியிலிருந்து நீக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

ட்ரம்புக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்று திரண்ட அமெரிக்கர்கள்.. | Us Rally Against Donald Trump

வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் இந்த போராட்டங்களை “ட்ரம்ப் மீதான வெறுப்பு சிகிச்சை அமர்வுகள்” என நிராகரித்தார்.

இருப்பினும், போராட்டக்காரர்கள் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் குடியேற்ற கொள்கை மற்றும் ஈரான் போரில் நடவடிக்கைகள் குற்றச்செயல் என்று விமர்சித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஜனாதிபதி நடவடிக்கைகளுக்கு எதிராக தெளிவான எதிர்ப்பை காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments