மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் விசாகன் சத்தியமூர்த்தி மார்ச் 21ஆம் திகதி போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த இவர், பல ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவமுள்ள வீரராகக் கருதப்படுகிறார்.

மத்திய கிழக்கு போரில் உயிரிழந்த முதல் தமிழ் வம்சாவளி அமெரிக்க இராணுவ வீரராக இவரின் மறைவு குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இவரின் மறைவு உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமூகத்தினரிடமும், அமெரிக்கத் தமிழ் வட்டாரங்களிலும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீரமரணமடைந்த விசாகன் சத்தியமூர்த்தியின் இறுதிச் சடங்குகள் ஏப்ரல் 2ஆம் திகதி, லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய மயானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளன.

இதில் அமெரிக்க இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments