அமெரிக்காவுடன் ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வராமலும், ஹோர்முஸ் நீரிணையை திறக்காமலும் இருந்தால் அந்நாட்டின் அனைத்து மின்நிலையங்கள் மற்றும் எண்ணெய் வளங்களை முழுமையாக அழித்து விடுவதகா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோசியல் கணக்கில் அவர் இது தொடர்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தீவிர பேச்சுவார்த்தை

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரானில் நமது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதுடன் அவற்றில் பெரும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஏதேனும் காரணத்தால் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், மற்றும் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை முடிக்கும் முன் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், மற்றும் கார்க் தீவில் உள்ள முக்கிய வளங்களை முழுமையாக அழித்து விடும்”

ஈரானின் எண்ணெய்

ஈரானின் எண்ணெயை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் சாத்தியக்கூறு குறித்து நேற்றையதினம் பேசியிருந்ததை தொடர்ந்து ட்ரம்பின் மேற்கண்ட எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

ஆத்திரமடைந்த ட்ரம்ப்! ஈரானுக்கு வெளியிட்ட புதிய எச்சரிக்கையால் கடும் பதற்றம் | If Deal Is Not Reached Trump Warn Iran

Image Credit: Fortune

ஈரானின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவதா வேண்டாமா என்று பரிசீலித்து வரும் நிலையில், ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதே தனது விருப்பம் என ட்ரம்ப் ஒரு செய்தித்தாளிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments