அமெரிக்கா முன்மொழிந்த 48 மணிநேரப் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars) இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

நம்பகமான ஒரு மூலத்தை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முன்மொழிவு கடந்த புதன்கிழமை (01-04-2026) அன்று ஈரானிடம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்நிறுத்த முயற்சி

பெயர் குறிப்பிடப்படாத ஒரு நட்பு நாடு வாயிலாக இந்த அமைதித் திட்டம் ஈரானுக்குக் கைமாற்றப்பட்ட போதிலும் அதனை ஈரான் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் 48 மணிநேரப் போர்நிறுத்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த ஈரான் | Us Iran 48 Hour Truce Fails Over Rejection

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments