தெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

குறித்த விடயத்தை ட்ரம்ப் வியாழக்கிழமை (02) இரவு ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளளார். 

ஈரானில் எஞ்சியிருப்பவற்றை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் தொடங்கவே இல்லை.

இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடை

அடுத்து பாலங்கள், அதன் பிறகு மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு என்று அந்த எச்ரிக்கையில டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் பாலங்களை தகர்த்தெறிவேன் - மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தல் | Trump Threatens Strike Irans Bridges Power Plants

ஈரானின் தலைமைக்கு “என்ன செய்ய வேண்டும், அதை விரைவாகச் செய்ய வேண்டும் என்பது தெரியும்!” என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு ஒப்பாக அமையக்கூடும் என்று கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த பல சர்வதேச சட்ட வல்லுநர்கள் வியாழக்கிழமை (2) முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

போரில் மனிதாபிமான நடத்தை குறித்த 1949 ஆம் ஆண்டு ஜெனீவா உடன்படிக்கைகள், பொதுமக்களுக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments