ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதலை சமரசம் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்காக, போரிடும் தரப்புகள் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு வாரங்களுக்கு எல்லா தரப்பினரும் போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தால், தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு செல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.

விரைவில் பதில்

அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ள அதேவேளை, நல்லெண்ண நடவடிக்கையாக, ஈரான் முக்கியமான ஹோர்மோஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

ஈரான் போரை நிரந்தரமாக முடிக்க பாகிஸ்தான் கூறிய வழி! அமெரிக்கா வழங்கிய பதில் | Pakistan Pm Asks Trump To Extend War Deadline

இந்த நிலையில், மேற்படி முன்மொழிவு தொடர்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெரோலின் லீவிட், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு இந்த முன்மொழிவு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments