போராட்டம் திரைப்படத்தின், “வீரனே வா” என்ற பாடல் (Lyrics Video), எதிர்வரும் 11ஆம் திகதி ளெியிடப்படவுள்ளது.
இசைநிகழ்ச்சி
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள “எங்கட பொடியள்” என்ற ஜனரஞ்சக இசைநிகழ்ச்சியின் போது இந்த பாடலின் வெளியீடு இடம்பெறவுள்ளது.
இதன்போது, பாடலை, திரைப்படத்தின் கதாநாயகன் ரீகன் மற்றும் சொல்லிசை பாடகர் வாகீசன் ராசையா ஆகிய இருவரும் இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இம்மாதம், 11ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் போது, சொல்லிசை பாடகர் வாகீசன் ராசையாவால் பாடப்பட்டு, இப்பாடல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும், சுவிட்ஸர்லாந்தில் உள்ள திரைத்துறையை சார்ந்தவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்
