தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர் வடமலை கௌதமனின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்ட பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இயக்குநர் கௌதமனின் மகளான கௌ.பரஞ்சோதிக்கும் தொழிலதிபர் கண்ணனின் மகன் க.குணாநிதிக்கும் சென்னை எம்.ஜி.எம் பீச் ரெசார்ட் அரங்கில் நேற்றுமுன்தினம் (06) திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடந்தேறியது.

மேதகு ஆசியுடன் .... கவனம் ஈர்த்த இயக்குனர் கௌதமன் வீட்டு நிச்சயதார்த்த பத்திரிகை | Ltte Leader Name Wedding Engagement Invitation

 மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி ஆசியோடு மண உறுதி மகிழ்ச்சி நாள் விழா

அந்த நிச்சயதார்த்த பத்திரிகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் அவரது பாரியாரின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. மேதகு வே.பிரபாகரன் – மதிவதனி ஆசியோடு மண உறுதி மகிழ்ச்சி நாள் விழா” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிச்சயதார்த்த பத்திரிகைக்கு பலரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேதகு ஆசியுடன் .... கவனம் ஈர்த்த இயக்குனர் கௌதமன் வீட்டு நிச்சயதார்த்த பத்திரிகை | Ltte Leader Name Wedding Engagement Invitation

அரங்கிற்குள் வரும் வழிநெடுக சங்ககாலம் தொட்டு இன்று வரையிலான மூலவன் முருகன், தொல்காப்பியர், ஒளவையார், கம்பர், வள்ளுவர், வள்ளலார் தொடங்கி, கரிகாலன்,

இராஜராஜ சோழன், தமிழ்த் தேசிய வழிகாட்டிகளான மேதகு பிரபாகரன், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், கௌதமனின் தந்தையும் தமிழ்த் தேசிய போராளியுமான தோழர் வடமலை, பாரதிதாசன், திருவிக, மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் வரையிலான உணர்வுமிக்க பதாகைகளும் வரிசைகட்டி வரவேற்றது வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments