அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒத்துழைப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் ஹோர்முஷ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தடையின்றி நடக்கும் என்றும், ஒருவேளை சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் மற்ற வழிகளில் அது சரிசெய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன. இதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தான் விரைந்துள்ளது.

99 சதவீத இலக்கு

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து விளக்கிய ட்ரம்ப், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே தங்களின் 99 சதவீத இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஹோர்முஷ் நீரிணை விவகாரம் மிக விரைவாக முடிவுக்கு வரும் என நான் கருதுகிறேன். அது தானாகவே நடக்காவிட்டால், நாங்கள் வேறொரு வழியில் அதை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

ஈரானுடன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் அவர்களின் அணு ஆயுதக் கனவைத் தடுப்பதே ஆகும்.” என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments