யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் பொழுதுபோக்கு மையங்களை அமைப்பதற்காக  தனியார் ஒருவருக்காக கோரப்பட்ட காணி கோரிக்கை மக்களின் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு குடத்தனை, வடக்கு, பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் தனியார் ஒருவருக்கு கொல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மைய்யங்கள் அமைப்பதற்க்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றைய தினம்(10.04.2026) கலந்துலையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அன்றாட பிரச்சனை

காணியை கோரிய குறித்த நபர் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் தலைமையில் மணல்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடன் கலந்துரையாடல் பொற்பதியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு | 300 Acres Of Land Seized In Vadamarachchi East

இதில் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்க்காக விருப்பம் கோரியபோது, மக்களால் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் இவ்வாறு இவர்கள் இது சம்மந்தப்பட்ட கலந்துரையாடலை பல தடவை மேற்கொண்டு உள்ளதாகவும் அதன் போது கிராம மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்த போதும் அவர்கள் மீண்டும் மீண்டும் முன்வருவது வருத்தத்துக்குரிய விடயம் என கிராம மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் குறித்த தனியார் நிறுவனம் கிராம மக்களுக்கு கலந்துரையாடல் செய்வது தனக்கு அறிவிக்கவில்லை என மக்கள் முன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பின்னர் கிராம மக்களிடம் பிரதேச செயலாளர் காணி கொடுக்க மறுப்பதற்கான காரணத்தை வினாவிய போது, தமது அன்றாட தேவைக்கே தமது கிராமத்தில் நிலப்பரப்பு குறைவாக உள்ளது எனவும் மற்றும் புதிதாக திருமணம் செய்து வரும் குடும்பங்களுக்கு இதுவரை இருப்பதற்கு காணி வழங்கவில்லை எனவும் என பல காரணங்கள் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டது

பின்னர் குறித்த கிராம உத்தியோகத்தர் களிடமிருந்து பிரதேச செயலாளர் காணிகள் இல்லாத குடும்பங்களின் விபரங்கள் மற்றும் எண்ணிக்கையினை அறிக்கையிட்டு அவர்களுக்கு காணி வழங்குவதற்கான வேலைத்திட்டம் மிக விரைவில் நடைபெரும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணி கோரிக்கை! மக்கள் கடும் எதிர்ப்பு | 300 Acres Of Land Seized In Vadamarachchi East

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments