பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தை வந்தடைந்த ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் முகமது பாகர் கலிபாஃப், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் அரசு ஊடகத்திடம் பேசிய அவர், இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், அமெரிக்கத் தரப்பைத் தாங்கள் முழுமையாக நம்பவில்லை என்று தெரிவித்தார்.
முந்தைய அனுபவங்கள்
இது குறித்து அவர் கூறியதாவது, “எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆனால் அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமெரிக்கா ஒரு நேர்மையான ஒப்பந்தத்திற்குத் தயாராக இருந்தால், நாங்களும் அதற்குத் தயாராகவே இருக்கிறோம்.

Image Credit: Al Jazeera
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எங்களது முந்தைய அனுபவங்கள் அனைத்தும் தோல்வியிலும், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதிலுமே முடிந்துள்ளன.”
ஈரானின் நிலைப்பாடு
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, ஈரான் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

Image Credit: Tactical Report
கடந்த காலங்களில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது போன்ற கசப்பான சம்பவங்களைச் சுட்டிக்காட்டியே கலிபாஃப் இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
