ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா 50% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், பெய்ஜிங்கிற்கு அத்தகைய திட்டங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டிய போதிலும், அது அவ்வாறு செய்யும் என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்..
“MANPADs என அறியப்படும், தோளில் வைத்துச் சுடும் வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெய்ஜிங் மாற்றுவதற்குத் தயாராகி வருவதாக வெளிப்படுத்திய தகவலுக்கு அமைய ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.
தோளில் வைத்துச் சுடும் ஏவுகணை
‘சீனா தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகளை, அதாவது வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை, வழங்கி வருவதாக நான் செய்தி அறிக்கைகளைக் கேள்விப்படுகிறேன்’ என்று அவர் கூறினார்.”

அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று எனக்குச் சந்தேகம்தான், ஏனென்றால் எனக்கு ஒரு உறவு இருக்கிறது, அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன், என அவர் கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதை நாம் கண்டறிந்தால், அவர்களுக்கு 50% வரி விதிக்கப்படும். அது மலைக்க வைக்கும் ஒரு தொகை,” என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளா
