பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வெலிகந்த, சுசிரிகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(12.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் அதிவேகமாகப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிளும் சுசிரிகம பகுதியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இருவர் உயிரிழப்பு
இந்த விபத்தின் கோரத்தினால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் சுசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், மற்றையவர் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கவனக்குறைவான செலுத்துகை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
