அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று, அதன் உடலில் ஏராளமான சிதறல் சேதங்களுடன் பிரித்தானியாவில் தரை இறங்கியுள்ளது.

ஓஹியோ தேசிய காவல்படைக்குச் சொந்தமான இந்த நான்கு எஞ்சின் கொண்ட விமானம், லண்டனுக்கு வடக்கே உள்ள RAF Mildenhall விமான தளத்தில் தரை இறங்கியபோது எடுக்கப்பட்ட காணொளியில் அதன் உடல் முழுவதும் ஏராளமான ஒட்டுவேலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஈரான் ஏவுகணை தாக்குதல்

கடந்த மாதம் சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் போது, இந்த விமானம் அங்கு தரைதளத்தில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்தத் தாக்குதலில் ஏற்கனவே அமெரிக்காவின் E-3 AWACS விமானம் ஒன்று அழிக்கப்பட்ட நிலையில், இந்த KC-135 விமானமும் அதன் அருகாமையில் இருந்து சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலதிக திருத்தப் பணிகள்

இந்த ஒட்டுவேலைகள் வெடிகுண்டு சிதறல்களால் ஏற்பட்ட ஓட்டைகளை மறைக்கவே செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்! | Damaged Us Military Plane Lands In Uk

இதன்படி, பிரித்தானியாவில் குறித்த விமானம் தரையிரங்கிய மேற்படி விமான தளம் அமெரிக்காவின் 100-வது ரீஃபூயலிங் விங்கின் (100th Refueling Wing) மையம் என தெரியவருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட விமானத்தில் மேலதிக திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே அங்கு தரையிறக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments