ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக திறக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனாலாட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் அவர் வெளியிட்ட truthsocial பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர்,

முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது

“ஈரான் கடற்பாதை (Strait of Iran) முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப் | Trump Thanks Iran For Opening The Strait Of Hormuz

முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் வெளியிட்ட மற்றுமொரு பதிவில், 

ஹோர்முஸ் நீரிணை

“ஹோர்முஸ் நீரிணை வர்த்தகத்திற்கும் முழுமையான போக்குவரத்திற்கும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப் | Trump Thanks Iran For Opening The Strait Of Hormuz

ஆனால் ஈரானுடனான நமது பரிவர்த்தனை 100% நிறைவடையும் வரை, ஈரானைப் பொறுத்தவரை மட்டும் கடற்படை முற்றுகை முழு வீச்சிலும் செயல்திறனிலும் தொடரும்.

பெரும்பாலான விடயங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதால், இந்த செயல்முறை மிக விரைவாக நடைபெறும்.

இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! டொனால்ட் ஜே. ட்ரம்ப்” என கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments