புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று(17.4.2026) இடம்றெ்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அரசு எண்ணக்கூடாது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்படுவதாகக் கூறினால், கடந்த 75 வருட கால இனவாத அரசியலை விடுத்து, அனைத்து மக்களையும் சமமாக மதித்து இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.அவ்வாறில்லாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், இதுவும் கடந்த காலங்களைப் போன்றதொரு இனவாத அரசாங்கமாகவே மக்களால் பார்க்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
