மட்டக்களப்பில் பணத்தகராறு காரணமாக தனது தாயை அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி 04, சந்தைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பண விவகாரம்

இச்சம்பவத்தில் சித்தாண்டி 04 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் | Atrocity In Tamil Area Son Beats Kills His Mother

உயிரிழந்த தாய்க்கும் அவரது மகனுக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மகன் தனது தாயை கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய் உயிரிழந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments