கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் உள்ள ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:40 மணியளவில், Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்

இது தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், வீட்டிற்குள் ஒரு நபர் மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

கடுமையான காயங்கள்

காயமடைந்த நபருக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், கடுமையான காயங்கள் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என பொலிஸ அதிகாரி நிக்கோலஸ் கிளக்ஸ்டைன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனவும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது எனவும் பொலிஸார் இன்னும் தகவல் வெளியிடவில்லை.

சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, சந்தேகத்திற்குரிய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments