தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய அரசியல் களத்தில் தற்போது நிலவும் போட்டியில், நடிகர் சி. ஜோசப் விஜய் ஒரு டிஸ்ரப்டர் (வழிமறிப்பாளர்) ஆக மட்டுமே இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.87 கோடியாக அதிகரித்துள்ளது.சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் 30வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெறுவாராக இருந்தால் ஆட்சியமைப்பார் என்பது தற்போது இந்தியாவில் இருக்கும் தேர்தல் கொள்கை வகுப்பாளர்களால் பார்க்கப்படும் கணிப்பாக உள்ளது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments