ஈழத்தின் புகழ் பெற்ற பாடகர் தேனிசை செல்லப்பா காலமான செய்தி  ஈழத்மிழர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் என ஈழத் தமிழ் பாடல் இலங்கை தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் பெரும் புகழ் பெற்ற பாடலாகும்.

ஈழத்தமிழர் மனங்களில் என்றும் அவர் நினைவுகள்…

குறித்த பாடலை தன் குரலால் விடுதலைப் போர் தொடுத்த பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா காலமானார். தேனிசை செல்லப்பா அவர்களின் பல  பாசறைப்பாடல்கள் இன்றும்  உலகம் எங்கும்  ஒலித்துகொண்டிருக்கின்றது.

தேனிசை செல்லப்பா ஒரு பிரபலமான தமிழ் ஈழப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர், இவர் முக்கியமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்ட எழுச்சிப் பாடல்களை பாடியவராவார்.  

அவர் மறைந்தாலும் ஈழத்தமிழர் மனங்களில் என்றும் அவர் நினைவுகள் அழியாது. இந்நிலையில் அவரது மறைவுக்கு மலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவருக்கும் தமிமீழ மக்களிற்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர் ஆவார் , அவரின் எழுச்சிப்பாடல்களே எமது, போராளிகளின் வீரத்திற்கும் தமிமீழ மக்களின் எழுச்சிக்கும் வித்திட்டது என்பதில் மாற்றம் இல்லை,அவர் உடலால் எம்மை விட்டு பிரிந்தாரே இன்றி அவரின் பாடல்கள் எமது மனங்களில் எமது இனம் உள்ள வரை வாழும் , அவரின் உயர்ந்த பணிக்காக தமிமிழமக்கள் சார்பாக இறுதி வணக்கத்தை தெரிவிப்பதோடு அவரின் இழப்பால் மீழத்துயரில் இருக்கும் அவரின் உறவினர்களிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொழ்கின்றோம், T M ட news

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments