இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், கோழிக்கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவமாக பதிவாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கமரேட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு கோழிக்குழம்பு சமைத்துத் தருமாறு கணவன் தொடர்ந்து வற்புறுத்தியதே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கோழிக்கறிக்கு கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி | Wife Kills Husband By Slitting His Throat Chicken

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கடுமையான கைகலப்பாக மாறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் தலையிட்டும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அருகிலிருந்த அரிவாளை எடுத்து கணவனின் கழுத்துப் பகுதியில் தாக்கியுள்ளார்.

காயமடைந்த கணவன் தரையில் விழுந்து, தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபரான மனைவியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் அவர்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிய குடும்பத் தகராறு ஒரு கொடூர சம்பவமாக மாறியுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments