வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று(28.04.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பான விபரம்
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து, தோணிக்கல் ஆலடி தொடருந்து கடவைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போதே குறித்த இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் தொடருந்து பாதையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.