வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெருநகர காவல்துறை இதை ஒரு பயங்கரவாத சம்பவம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு சேவைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், “இந்தத் தாக்குதல் லண்டனில் உள்ள யூத சமூகத்தை வேண்டுமென்றே குறிவைத்ததா என்பது விசாரணையின் ஒரு கோணம்” என்றும் காவல்துறை கூறுகிறது.
தாக்குதலாளி கைது
கத்திக்குத்துக்கு இலக்கான, 70 மற்றும் 30 வயதுகளில் உள்ளவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. 45 வயதான சந்தேக நபர், காவல்துறை அதிகாரிகளையும் கத்தியால் குத்த முயன்றார். அவர் மீது டேசர் கருவி பயன்படுத்தப்பட்டு, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

“அவரது தேசியம் மற்றும் பின்னணியை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு ஏற்பட்ட கவலை
ஒருவர் கடைகளுக்கு வெளியேயும், மற்றொருவர் யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியேயும் கத்தியால் குத்தப்பட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் “மிகுந்த கவலையளிக்கிறது” என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்., மேலும் “நமது யூத சமூகத்தின் மீதான தாக்குதல்கள் பிரிட்டன் மீதான தாக்குதல்களாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.


