தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவின் முன்னணி ஊடகம் வெளியிட்ட People’s Pulse வாக்காளர்கள் இடையே மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பில் தி.மு.க 125 முதல் 145 இடங்கள் வரை வெற்றி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
த.வெ.க 18 முதல் 24 இடங்கள்
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க 65 முதல் 80 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், த.வெ.க 18 முதல் 24 இடங்களையும், நா.த.க 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு கூறப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகள் உண்மையான தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்குமா என்பது குறித்து அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர்.
எனினும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே இறுதி நிலை தெளிவாகும் எனவும் குறித்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.
