யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில், தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் பலாலி வடக்கில் இருந்து சுமார் 15 கடல் மைல் தூரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில், அப்பகுதிக்கு வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் அவர்களுடன் முரண்பட்டு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, இருவர் படகுடன் தப்பி மீண்டு வந்த நிலையில், ஒருவர் மாத்திரம் தமிழக கடற்றொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ஊடகங்கள் இலங்கை கடற்றொழிலாளர்களை கடற்கொள்ளையர்கள் என்று குறிப்பிட்டிருந்தன.

இந்தவிடயங்கள் தொடர்பான கருத்துக்களை சட்டத்தரணி தோ.ம ஜோன்சன் எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…   

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments