கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின் மீதுள்ள கோபத்தால் கணவன், வீட்டில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது என மனைவி கிளிநொச்சிபொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரவு வேளையில்திருட்டுத்தனமாக காணிக்குள் வந்த கணவன் மரம் வெட்டும் இயந்திரம் மூலம் தென்னைகளை வெட்டி வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கும் மனைவி காய்க்கும் நிலையில் தனக்கு வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த தென்னைகளையே வெட்டி வீழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில தென்னைகளை வெட்டி வீழ்த்தியதோடு மேலும் சில ஒரு தென்னை வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதுவும் சற்று பலமான காற்று வீசும் போது வீழ்ந்துவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments