கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் நடைபெற்ற மே தினப் பேரணியின் போது, கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பிளாஸ்டிக் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய நபர் ஒருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த சந்தேகநபர் பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைத்துப்பாக்கி வடிவில் காணப்பட்ட அந்தப் பொருள் ஒரு பிளாஸ்டிக் மாதிரியே என்றும், அதைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சிப் பகுதியையே வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
