நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.
எதிர்வரும் மே 7ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழக வெற்றி கழகத்தின் இத்தகைய வெற்றிக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள்.
