சரவணன் அந்தக்காலத்தில் அனைவரும் சொல்ல மறக்காத பெயர். அப்போதைய கதாநாயகன் .தொலைத்தொடர்பு சரவணன் சரவணன் என அலறிக்கொண்டே இருக்கும். ஓய்வின்றி வேலைகளை ஒழுங்கு செய்யும செயல்வீரன். முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவராக அவர் முடங்கியிருக்கவில்லை.
தமிழ்செல்வன் அண்ணாவின் அரசியலின் முழு தொலைத்தொடர்பும் அவர் கைகளுக்குள் இருந்தது. துடிப்பான ஆன்மா உறங்கி கொண்டது. பலவருடங்களுக்கு முன்னர் ஆரம்பத்தில் ஒருநாள் முகப்புத்தகத்தில் உரையாடல் ஆரம்பித்தது. அக்கா நிறைய நல்லவிடயங்கள் செய்கிறீரகள். .பிள்ளைகளுக்கு நீங்கள் வேண்டும். எல்லோராலும் உங்களைபோல வாழமுடியாது.
ரேகா அண்ணை இருக்கும் போது எப்படி வாழ்ந்தாரோ அதே போல உங்கள் தொடர் செயற்பாடுகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது ஆனால் கவனம் அக்கா என்றார். நடப்பது எதுவாயினும் எதிர்கொள்ள நினைக்கிறேன் சரவணன் என்றபோது எம்போல பலருக்கு நீங்க ஆறுதல் என்றார் . .
கதைத்துக்கொண்டே சென்றபோது நாளடைவில் தனது துன்பம் கடினமானவாழ்வியலை ஒரு சகோதரி போல நினைத்து என்னிடம் பகிர்ந்தார். . வெளிநாட்டிலிருந்த என் பள்ளித்தோழன் சயந்தனுடன் அவரை அறிமுகமாக்கினேன். சரவணன் என்னும் ஆன்மா இறுதிவரை ஓயாமல் உழைத்தது.
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் முடங்கி உட்காராமல் தனது குடும்பத்தையும் செதுக்கியது. அக்கா பொல்லாத உலகம். நல்லவர்களுக்கு காலமில்லை. எனவே கவனம்.எம் போன்ற பலருக்கு உங்கள் மேல அக்கறை உண்டு என சில வருடம் முன்பும் சொன்னார். அவரில் நான் அக்கறை கொண்டமைக்காக அந்த நன்றியை மறவாமல் என் நிலைத்திருக்கவேண்டிய வாழ்வை விரும்பிய என்மேல் அக்கறை கொண்ட ஆன்மா விடைபெற்றுவிட்டது. மாற்று வலுவுள்ளோருக்காக தொடர்ந்து சேவைகள் செய்தார். சென்று வாருங்கள் சரவணன் ..