மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத இரு ஆண்கள் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலம் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை சம்பவ தினமான இன்று மாலை 5.00 மணிக்கு கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு அறிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலங்கள்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கி இருக்கும் இரு ஆண்களது சடலங்களை மீட்டனர்.

அதேவேளை நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.