அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை நடவடிக்கைகளுக்கு இராணுவப் பதிலடி வழங்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான அலி கெஸ்ரியன், அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களுக்குப் பல பாதுகாப்புப் படகுகளை வழங்க வேண்டும்.
இராணுவப் பதிலடி
அதன் மூலம் அமெரிக்க மாலுமிகளின் கப்பல் மூழ்கும் பட்சத்தில் அவர்களை மீட்க முடியும் என்றும் கூறினார்.
“இனிமேல், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைகளுக்கு ஈரான் இராணுவ பதிலடி கொடுக்கும்” என்று ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி-க்கு அளித்த நேர்காணலில், கெஸ்ரியன் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற இரண்டு ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் செயலிழக்கச் செய்த நிலையில், அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க கடற்படை முற்றுகை
செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையைப் புகழ்ந்துரைத்து, “யாரும்” அதை எதிர்க்க மாட்டார்கள் என்று உறுதிப்படுத்தினார்.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், வியாழக்கிழமையன்று இந்த முற்றுகையைக் கண்டித்து, இது “இராணுவ நடவடிக்கையின் நீட்டிப்பு” என்று குறிப்பிட்டார்
