நம்மில் யாரும் விரும்பாத ஒரு போரை நாடு எதிர்கொண்டது. அந்தப் போரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர அனைத்து இனத்தவருக்கும் உரிமை உண்டு.

அவர்கள் சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, இறந்த தங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு.

அந்த உரிமையை நாம் முழுமையாகப் பாதுகாத்துள்ளோம். அந்த சுதந்திரத்தை நம் அனைவருக்கும் நாம் வழங்கியுள்ளோம் என அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நினைவுகூர அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை

இதன்போது போர்வீரர்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு வெளியே, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறும் இனப்படுகொலை வாரம் என்ற தொடர் நிகழ்வுகள் உட்பட, பிற தரப்பினரால் நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு | All Nationalities Right Commemorate All Those Died

இதற்கு பதில் வழங்கிய அவர்,  “போரில் உயிரிழந்த எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் நினைவுகூர அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை உண்டு” என்று அமைச்சர் பதிலளித்தார்.

மகிந்தவை ஏன் அழைக்கவில்லை

அத்துடன் இன்று (19) பத்தரமுல்லவில் தற்போது நடைபெற்றுவரும் போர்வீரர்கள் நினைவு விழாவிற்கு அரசியல் களத்தை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு | All Nationalities Right Commemorate All Those Died

போரை முடிவுக்குக் கொண்டுவர பங்களித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்விற்கு அழைக்கப்பட்டாரா என்று ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, அத்துடன் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோர் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

மேலும், முப்படைகளும் காவல்துறையும் இந்த நினைவு விழாவில் கலந்துகொள்ளும் என்றும், வேறு எந்த அரசியல் அதிகார அமைப்பும் அழைக்கப்படவில்லை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments