ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முற்படவில்லை என்ற தனது சமீபத்திய உறுதிமொழிகளை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஈரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக்களில்,
தற்போதைய பேச்சுவார்த்தை
“அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்தும் குறிப்பிடுவது போல், நாங்கள் அவமானகரமான ராஜதந்திரத்தில் ஈடுபடுவதில்லை.

உலகின் மிக வலிமையான சக்திக்கு எதிராக நாம் நின்றால், அதன் சிரமங்களை நாம் ற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
நாம் சண்டையிட்டுவிட்டு, இந்த செயல்முறை முன்பைப் போல இயல்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
