ஈரானுடனான போரை அமெரிக்கா இன்றுடன் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீடித்துவந்த இராணுவ மோதல்கள் மற்றும் சண்டைகளை நிறுத்துவதற்காக இரு தரப்பினரும் மிகவும் வலுவான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜார்ஜியா மாநிலத்தின் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் துணை ஆளுநர் பர்ட் ஜோன்ஸுக்கு ஆதரவாக நடைபெற்ற இணையவழிப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே ட்ரம்ப் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன்போது, ஈரானியத் தரப்பு இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க மாட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களின் முழு முதற் நோக்கமும், வலியுறுத்தலும் அதுவாகவே இருந்தது என்றும், இந்த உடன்பாட்டின் 95 வீத வெற்றி இதில் அடங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ட்ரம்பின் மேற்படி அறிவிப்புகளை ஈரான் தரப்பு முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள், அந்நாட்டுத் தலைமையின் மிக உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற வகையில், இன்று இரவு ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை

மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளும் அதன் இறுதி அம்சங்களும் கொள்கை அளவிலும் சரி, மிக விரிவான அளவிலும் சரி, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

இந்த உடன்பாட்டின் ஒப்புதலில் அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் எனவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments