தமிழர்களுக்கான சுதந்திர வேட்பாளர்கள் அமைப்பு (Freedom Hunters for Tamils) அமைப்பினர் இன்று லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது, கடந்த வாரம் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு அவரகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சங்கீதனின் கைது தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டதுடன், தமிழர்கள் மீது தொடர்ந்து PTA சட்டம் பயன்படுத்தப்படுவது மனித உரிமைகள், கருத்துரிமை மற்றும் ஜனநாயக அடிப்படை உரிமைகள் தொடர்பாக கடுமையான கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அடிப்படை மனித உரிமைகள்

சங்கீதனுக்கு நீதியான சட்ட நடைமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவரது அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் பாடகர் சங்கீதனின் கைது! விடுதலைக்காக லண்டனில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம் | London Protest Release Of Tamil Singer Sangeethan

Advertisement

மேலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உலகத் தமிழர்கள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி நீதிக்காக குரல் கொடுக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழர் சுதந்திர வேட்டையர்கள் அமைப்பு, மனித உரிமைகள், நீதி மற்றும் கருத்துரிமையை பாதுகாக்கும் தங்களது அமைதியான போராட்டம் தொடரும் என  அறிவித்துள்ளது

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments