ஜி7 உச்சிமாநாட்டுக்குப் பிறகு உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அணுகுமுறை உண்மையிலேயே மாறியுள்ளதா என்பது குறித்து வொஷிங்டன் தங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது உக்ரைனில் ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்பதை ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் இது அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் 

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா | Russia Demands Clarity On Trump Ukraine Policy

Advertisement

அத்தோடு உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்குப் பிறகு ரஷ்யாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தமை, ஜி7 தலைவர்கள் மத்தியில் அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகும் என்ற மிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில் கீவ் அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக அமெரிக்கா திட்டமிட்டுக் கால அவகாசம் வாங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் படைகள்

அத்தோடு கடந்த ஒகஸ்ட் மாதம் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் ட்ரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட உடன்பாடுகளை அமெரிக்கா கைவிட்டுள்ளதாக மேக்ரோன் தெரிவித்திருந்ததை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகள் பின்வாங்கினால் பிற பகுதிகளில் போர்க்கள எல்லைகளை முடக்குவதற்குப் புடின் ஒப்புக்கொண்டிருந்த ஆங்கரேஜ் உடன்பாடுகளை வாஷிங்டன் இதுவரை செயல்படுத்தவில்லை என்று ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா | Russia Demands Clarity On Trump Ukraine Policy

Advertisement

இந்தநிலையில் அமெரிக்கத் தடைகள் தொடர்வது பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய தூதரகச் சொத்துக்கள் திருப்பித் தரப்படாமை மற்றும் உக்ரைனுக்குத் தங்குதடையின்றி ஆயுதங்கள் விற்கப்படுவது போன்ற காரணங்களால் இருதரப்பு உறவை வழமைக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவிடம் போதிய அக்கறை இல்லை என ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்பின் தூதுவர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் மாஸ்கோ வருகையை எதிர்பார்ப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments