யாழ்ப்பாணம்-தொல்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27.6.2026) இரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22.06.2026 அன்று ஒரு கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது வயிற்றில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

யாழ்.தொல்புரத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | Man Stabbed In Tholpuram Dies After Treatment

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபரை முன்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (07.07.2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments