நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவர் கண்ணீர் மல்க விபரித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதியொருவரின் தாயான நந்தினி என்பவர், பிபிசி சிங்கள சேவையிடம் மிகவும் உருக்கமான முறையில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவனை நேற்றைய தினம் அவர்கள் அடித்துக் கொன்றுவிட்டனர்.

தாயின் கதறல்.. 

தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச் சுட்டு, எனது மகனுக்கு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடூரமான வதையைக் கொடுத்துக் கொன்றுவிட்டனர்.

கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள் - மகனை இழந்து கதறி அழும் தாய் | Prisoners Brutally Killed Cry Mother Lost Her Son

எனது மகனின் சடலம் இன்னும் நீர்கொழும்பு மருத்துவமனையிலேயே உள்ளது. எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனையாவது என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன்.

எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள். அந்தப் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். உயிருடன் இருக்கும் பிள்ளையையாவது என்னிடம் ஒப்படையுங்கள், நான் சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று அவர் மேலும் உருக்கமாகத் தெரிவித்தார்.

நந்தினியின் உருக்கமான பாசப்போராட்டம் சிறைச்சாலை முன்பாக திரண்டிருந்த அனைவரின் கண்களையும் கலங்க செய்துவிட்டது.

பெயர் பட்டியல்..  

இதற்கிடையே இன்னுமொரு கைதியின் உறவினரான டி. எம். ஞானதிலக, சிறைச்சாலையில் உள்ள தங்கள் பிள்ளைகள் இருக்கும் இடம் குறித்த எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சிறைக் கைதிகள் - மகனை இழந்து கதறி அழும் தாய் | Prisoners Brutally Killed Cry Mother Lost Her Son

நேற்றைய தினத்திலிருந்து இந்தச் சிறைச்சாலையில் மோதல் ஒன்று இடம்பெற்று வருகிறது. எதனால் இந்த மோதல் ஏற்பட்டது என்ற காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும். எங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு பார்க்க அனுமதிக்கவில்லை, இங்கே வந்தாலும் உள்ளே பார்க்க அனுமதிப்பதில்லை. இங்கிருப்பவர்கள் யாராவது ஒருவராவது, பிள்ளைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொல்ல வேண்டும்.

ஒன்று, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். அல்லது உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலையாவது வெளியிட வேண்டும். குறைந்தது, உயிரோடு இருப்பவர்களின் பட்டியலையாவது எங்களுக்குத் தர வேண்டும் என்று அவர் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments