ஓமான் வளைகுடாவிற்கு குறுக்கே உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தைக் கொண்டுள்ள தெற்கு ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தின் கொனாரக் (Konarak) பகுதியில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையங்கள், தளவாட நெட்வொர்க்குகள் மற்றும் புஷெஹ்ர் (Bushehr) அணு உலை உள்ளிட்ட தெற்கு ஈரானின் பல இடங்களைக் குறிவைத்து அண்மையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு ஈரானில் தொடருந்து தண்டவாளங்கள் போன்ற பொதுமக்களின் உள்கட்டமைப்புகளும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேச்சுவார்த்தை 

ஈரானிய அதிகாரிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காக அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அமெரிக்காவின் கட்டாயப்படுத்துதல்களுக்குத் தாங்கள் பணியப்போவதில்லை என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

முன்னதாக தெற்கு ஈரானில் உள்ள குசெஸ்தான் மாகாணத்தின் அஹ்வாஸ் (Ahvaz) பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட மறைந்த அயத்தொல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் மற்றும் அடக்க நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதியிலேயே இந்தத் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments