தென்னிலங்கையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை மாவட்டத்தின் மத்துகம, நேபொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) மாலை அடையாளம் தெரியாத குழுவொன்றினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் குழுவொன்று இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை | Shooting House Police Are Actively Investigating

இந்தத் தாக்குதலில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் உயிர்ச்சேதமோ காயமோ பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகவும், சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments