சுமந்திரன் பதவி விலக வேண்டும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் பதவியில் இருந்து சி.வி.கே. சிவஞானத்தை விலகுமாறு அக்கட்சியின் காங்கேசன்தறை தொகுதிக் கிளை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  

GeographicReference

அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு 

குறித்த கடிதத்தில், பின்வரும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

1. 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போது வலி. வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனு சமர்ப்பித்தலிலுள்ள முறைகேடுகள்.

2. 21.10.2025 அன்று காங்கேசந்துறை தொகுதிக்கிளைக்கு எதிராக போட்டிக்கிளை அமைக்கப்பட்டமை தொடர்பான முறைகேடுகள்.

3. 31.05.2026 அன்று புதிய யாழ்ப்பாண மாவட்ட கிளை அமைக்கப்பட்டதிலுள்ள முறைகேடுகள்.

இவற்றை சுட்டிக்காட்டி, இக்காரணங்களுக்காக பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து உடனடியாக விலகுமாறு  காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை கோரியுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments