கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக தெரிவிக்கபடுகின்றது.

சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் முயற்சித்தபோது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் காவல் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments