அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போது எங்களிடம் பேச்சுவார்த்தைக்கான எந்த திட்டமும் இல்லை.
Advertisement

நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
அமெரிக்கா தனது கடமைகளை மீறினால் ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாது.
Advertisement
இது ஒரு கொள்கை, இதனை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்தத்தை அமெரிக்கா உதாசீனப்படுத்தி வருவதாக ஈரான் நம்புகின்றது” என தெரிவித்துள்ளார்.
