இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.

இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.

பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments