யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள ஒழுங்கையில் காணப்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் 3 பேஸ் மின்சார இணைப்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த குடும்பப் பெண் தனது வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை மீட்பதற்காக இரும்பு கம்பி ஒன்றை கிணற்றுக்குள் செலுத்தி கோழிக் குஞ்சை மேலே துாக்கும் போது மின் இணைப்புக்கு அருகில் சென்றதால் , பெண் மின்சாரத்தால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

குறித்த மின்சார இணைப்பு கம்பிகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேலாகவே செல்வதாகவும் இதனால் மின் கம்பிகள் அப்பகுதி வீடுகளின் மேல் விழுந்து பெருமளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments