டெஹ்ரான் – ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் இந்த மாதத்தில் பெரும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜூலை 6 ஆம் திகதி முதல் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஏழாவது இரவாக நடத்திய தாக்குதல்களின் காரணமாக, ஈரானின் தென்பகுதியில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மக்கள் குடிநீர் விநியோகமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் தேசிய நீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் தடை

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்குப் பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைவு: இந்த மாத தாக்குதல்களில் 50 பேர் பலி | Escalation Of Us Iran Conflict 50 Killed

கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தான போதிலும், தற்போது மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ‘பிக்அக்ஸ் மலை’ நிலத்தடி அணுசக்தி மையத்தைத் தகர்க்கப் போவதாக அண்மையில் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த இடம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. 

ExecutiveBranch

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments