நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீவிர சோதனை

சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்கான தீவிர சோதனைகளும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் அண்மைக் காலங்களில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான போட்டிகளுடன் தொடர்புடையவையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Beaches& Islands

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments