104 புதிய மெட்ரோ பேருந்துகள் இன்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்துகள், சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோட்டான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக, இந்த புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மே மாதம் கையெழுத்தானது.

இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்! | New Low Floor Buses Arrive For Lanka

Advertisement

மேற்படி, ஒப்பந்தத்தின்படி, இந்த 104 பேருந்துகளையும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments