அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், காஸ்வெல் (Caswell) கவுண்டியில் உள்ள பிராஸ்பெக்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கரோலினா மாநில புலனாய்வு அமைப்பு (State Bureau of Investigation – SBI) வெளியிட்ட தகவலின்படி, பிராஸ்பெக்ட் ஹிலில் உள்ள புரூக்ஸ் சாலையில் (Brooks Road) அதிகாலை ஏற்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காஸ்வெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் உதவி கோரியுள்ளது.
பின்னர் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்
வட கரோலினா அதிகாரிகள்
காயமடைந்த ஒருவரை டியூக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (Duke University Hospital) சிகிச்சைக்காக அனுப்பியதுடன், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்வெல் கவுண்டி ஷெரிஃப் டோனி டர்டன் (Tony Durden) உடனடியாக வட கரோலினா மாநில புலனாய்வு அமைப்பின் உதவியை கோரியதாகவும் SBI தெரிவித்துள்ளது.
Advertisement
இந்த துப்பாக்கிச்சூடு காலை சுமார் 8.00 மணியளவில் புரூக்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது சம்பவ இடத்தில் SBI-யின் குற்றப்புலனாய்வு நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை எந்த சந்தேகநபரும் அடையாளம் காணப்படவில்லை. மேலும், இந்த சம்பவம் குறிப்பிட்ட அந்த முகவரியுடன் மட்டுமே தொடர்புடையதாக இருப்பதால், பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்
